ஒசூர் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!

தமிழக – கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்து அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இத்தீ கொஞ்ச நேரத்தில் மளமளவென எரிய ஆரம்பித்தது. பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.