Fri. Dec 20th, 2024

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்த நடிகர் ரஜினி – வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமல்லா உலகளவிலும் ரசிகர்களை கொண்டுள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனைப்படைத்தது.

தனது 170வது திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் கேரளா சென்றுள்ளார். கேரளா சென்ற ரஜினிகாந்த்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கேரவனிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கையை அசைத்து, சிரித்து, வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.