Fri. Dec 20th, 2024

குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை : ஒருநாள் முன்பே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் – தமிழ்நாடு அரசு

கடந்த செப்டம்பர் 15ம் தேதி, அண்ணா பிறந்த நாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனையத்து, தமிழகத்தில் ஒவ்வொரு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.

இத்திட்டம் அக்டோபர் மாதம் முதல் மாதம்தோறும் 1-ம் தேதியே மகளிர் உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற ஜூலை மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 2-வது கட்டமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ரூ.1000 தொகை, இம்மாதம் 14ம் தேதியே வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 15ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால், ஒருநாள் முன்னதாகவே பயனாளர்களுக்கு வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.