தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில 4 நாட்களுக்கு கனமழை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நாளை முதல் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை மின்னலுடன் பெய்யும்.
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.