Tue. Mar 11th, 2025

ககன்யான் சோதனைக்கான மாதிரி கலன்கள் இஸ்ரோவிடம் ஒப்படைப்பு!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் புதிய சோதனைகளைத் தொடங்க இஸ்ரோ தயார் நிலையில் உள்ளது. விண்ணுக்கு அனுப்பப்படும் மனிதர்களை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப அழைத்துவரும் சோதனையும் விரையில் இஸ்ரோ தொடங்க இருப்பதாக தகவல் தெரிவித்தது.

விண்வெளி பயணத்தின்போது விஞ்ஞானிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வரும் TV-D1 வாகனத்தில் சோதனை தொடங்கியது.

இந்நிலையில், ககன்யான் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் சோதனைக்கான மாதிரி கலன் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மாதிரி கலனை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.