Tue. Mar 11th, 2025

தஞ்சையை தொடர்ந்து சென்னை வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் விழுந்த ₹753 கோடி – பதற்றத்தில் வங்கி அதிகாரிகள்!

தஞ்சையை தொடர்ந்து இன்று சென்னை வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் விழுந்த ₹753 கோடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று தஞ்சாவூர் Kotak Mahindra வங்கியில் கணேசன் என்பவர் வாடிக்கையாளராக உள்ளார்.

இவர் தன் நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்தினார். உடனே அவருக்கு ஒரு SMS வந்தது. அந்த SMSல் உங்கள் வங்கி கணக்கில் ரூ.765 கோடி மீதம் உள்ளதாக குறுஞ்செய்தி வந்தது.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேசன் உடனடியாக வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்தார்.

இது தொடர்பாக வங்கி மேலாளர் போனில் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று சென்னை மருந்து கடையில் பணிபுரியும் நபருக்கு வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி இருப்பதாக SMS வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ் கோடாக் வங்கிக்கணக்கிலிருந்து நண்பருக்கு ரூ.2000 அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய உடன் ரூ.753 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரம் மீதம் இருப்பதாக SMS வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன வாடிக்கையாளர் உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவையில் தெரிவித்ததையடுத்து அவரது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது.