Sun. Oct 6th, 2024

குழந்தைக்கு கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டதா? இப்படி சுற்றிப்போட்டால் திருஷ்டி அகலும்!

நம் முன்னோர்கள் காலத்தலிருந்து குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போடும் பழக்கத்தை வழக்கமாக வைத்து கடைப்பிடித்து வருகின்றனர்.

குழந்தைகள் கண் திருஷ்டி நீங்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம் –

ஒருப்பிடி கை அளவில் உப்பை எடுத்து அதை கையால் நன்றாக மூடிக் கொண்டு தாய் மடியில் குழந்தையை அமர வைத்து இடமிருந்து வலமாக 3 முறையும், வலமிருந்து இடமாக 3 முறையும் சுற்றி, தாய்க்கும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் போட்டு விட வேண்டும். தண்ணீரில் உப்புக் கரைய, கரைய திருஷ்டி அகன்று விடும்.

குழந்தை எதையோ பார்த்து பயந்துவிட்டால், சாப்பிடாமல் மெலிந்து போகும், அப்போது பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடலாம்.

கண் திருஷ்டியால் குழந்தை திடீரென்று கீழே விழுந்து அடிபடும். உடனே செங்கல் துண்டால் குழந்தையின் தலையை 3 முறை சுற்றி தூக்கிப் போட்டு உடைத்தால் கண் திருஷ்டி கழியும்.

கண் திருஷ்டி பட்ட குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய பிறகு, தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டை குழந்தையை கைகழுவ வைத்துவிட்டு அதை சுற்றி போடலாம்.

சாப்பிடப் போகும் முன்பு கூட ஒரு உருண்டை சாத்த்தை தட்டில் ஓரமாக எடுத்து வைக்கலாம்.

தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழிக்கக்கூடாது. அப்படி செய்தால், அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றினால் ஆயுள் குறையுமாம்.

குழந்தைக்கு கருப்பு திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப் பொட்டு குழந்தையின் திருஷ்டியைப் போக்கும்.