உடல் எடை குறைக்க நினைக்கப்பவர்களா? நடைப்பயிற்சி இப்படி செய்தால் போதும்…!
நம் உடல்நிலையை பொறுத்து உடற்பயிற்சிகள் மாறுபடும். ஆனால், நடைப்பயிற்சி என்பது எல்லோருக்கும் ஏற்றதுதான். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முதலில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நடைபயிற்சி ஆரம்பிக்கும்போது மிக தூரம் நடக்கக்கூடாது. நடைபயிற்சி துவங்கிய 2-வது வாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகரிக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் 5 கிலோ மீட்டர் வரை நடைபயிற்சி மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதன் பிறகு பழகிவிடும்.
நடைபயிற்சி மேற்கொண்டால் நம்முடைய தசைகள் வலுவடையும். உடல் எடை நன்றாக குறையும்.
ஜாகிங், சைக்கிளிங் பயிற்சிகள் 60 சதவிகிதம் தசைகளை வலுவாக்கும்.
புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள் 40 சதவிகிதம் உடல் எடை குறைக்கும்.
அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறைக்க முடியும்.
ஒவ்வொரு நாளும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதும். செய்தால் போதுமானது. வெறும் செருப்பு போட்டுக் கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது.
டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எப்பவேண்டுமானாலும் உடற்பயிற்சி செய்யலாம்.
என்றாலும், காலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
உடற்பயிற்சி செய்யும் போது எண்டார்பின் என்ற அமிலம் நன்றாக சுரக்கும்.
அன்றைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும்.
வீட்டில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் எடை பார்த்து குறித்துக் கொள்ளலாம்.
ஒரு கிலோ அல்லது அதற்கு மேல் ஒரே நாளில் அதிகரித்து இருந்தால், அன்றைய தினம் உணவில் சிக்கனத்தை கடைப்பிடித்து உடற்பயிற்சி செய்து குறைத்துக் கொள்ளலாம்.
நடைப்பயிற்சி முடிந்தவுடன் காபி, டீ குடிக்க வேண்டாம்.
20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.
உடற்பயிற்சி செய்து விட்டு நன்றாகக் குளித்த பிறகு உணவு சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
2 மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும்.