ஆற்றில் மிதந்து வந்த பீரங்கி குண்டு – எடுத்து பார்த்த 7 வயது சிறுவன் – குண்டு வெடித்து பரிதாப பலி!
மேற்குவங்கத்தில் ஆற்றில் மிதந்து வந்த பீரங்கியை எடுத்த 7 வயது சிறுவன், குண்டு வெடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 25க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமானார்கள். மேலும், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்து செல்லப்பட்டது.
இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த சிறு பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை அனைத்தும் அற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து, ஆற்றில் வெடிகுண்டு, பீரங்கிகள் ஏதாவது மிதந்து வந்தால் அதனை எடுக்கவோ, தொடவோ கூடாது என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்து அறிவித்தது.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று சிறுவர்கள் தீஸ்தா நதிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் பீரங்கி குண்டு ஒன்று மிதந்து வந்தது. அந்த குண்டை அவர்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். வீட்டில் அதை பார்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்துள்ளது.
இச்சம்பவத்தில் சாகினூர் ஆலம் என்ற 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 5 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடித்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து 5 சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் 5 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருக்கு ஜல்பைகுரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.