15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி 13 சவரன் நகை பறித்த இளைஞன் கைது!
15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி 13 சவரன் நகை பறித்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
ஜெயசீலன் பிரவீன் என்ற இளைஞன் இன்ஸ்டாகிராம் மூலம், நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியிடம் நட்புடன் பேசி வந்துள்ளார்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாவில் காதலிக்க தொடங்கிய ஜெயசீலன் பிரவீன் அந்த சிறுமியை ஏமாற்ற ஆரம்பித்தார். அவரிடமிருந்து 13 சவரன் நகைகளை ஏமாற்றி பறித்துள்ளார்.
சிறுமியிடம் வாங்கிய நகைகளை ஆசாரி ஒருவரிடம் கொடுத்து விற்றுத் தருமாறு கூறியுள்ளான். வீட்டில் நகைகள் காணாமல போனதால், சிறுமியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பெற்றோர், அவளை அடித்து விசாரணை செய்தபோது, உண்மையை கூறியுள்ளார்.
இதனையடுத்து, பெற்றோர் போலீசில் ஜெயசீலன் பிரவீன் மீது புகார் கொடுத்தனர். புகாரை பதிவு செய்த போலீசார் அவனிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்து அவனை கைது செய்தனர்.