Thu. Dec 19th, 2024

டிடிவி தினகரன் கட்சி காலி… யாருக்கு யார் போட்டின்னு மக்களுக்கு தெரியும் – எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு யார் போட்டி என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கூட்டணி தொடர்பாக அதிமுகவின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். தமிழகத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. தமிழக மக்களின் உரிமையைக் காக்கவே அதிமுக தனித்து போட்டியிடும்.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாடாளுமன்றத்தில் அதிமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும். சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுப்போம்.

டிடிவி தினகரனின் கட்சி இந்த தேர்தலுடன் முகவரி இல்லாமல் போய்விடும்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு யார் போட்டி என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.