Mon. Jul 8th, 2024

மயான இடத்தில் கடைகள் கட்டிய நகராட்சி நிர்வாகம் | மறியலில் ஈடுபட்ட பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர் |

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் மயானத்திற்கு ( சுடுகாடு ) உரிய இடத்தில் நகராட்சியின் சார்பில் கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்ட நிலையில் சமாதானம் செய்ய வந்த நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் கடை கட்டுவதை கைவிட வேண்டுமென்ற கோரிக்கையை வென்று எடுத்த பெண்கள் மீண்டும் அங்கு கடைகள் கட்டினால் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அமிர்தாபுரம், கே.கே. நகர், பகுதி மக்களின் சுடுகாடு அமைந்துள்ள நிலையில் மயான இடமாக இருக்கும் ராஜீவ் காந்தி நகரில், நகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே 10 கடைகள் கட்டியுள்ளனர், மேலும் 10 கடைகள் கட்டுவதற்கு முயற்சிகள் தொடங்கி உள்ளனர்.
இந்த கடைகளுக்கான கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மயான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் அப்பகுதியை சார்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து. ராஜீவ் காந்தி நகர் சுடுகாடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்..

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்குமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிட வலியுறுத்தினார். ஆனால், மயான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து நகராட்சி நிர்வாகம் கடை கட்டுவது நியாயமா? என்று கேள்வி? எழுப்பி போராட்டம் நடத்தினர்.,

சம்பவ இடத்திற்கு நகராட்சி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் சாலை மறியல் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் பேச வந்தனர் ஆனால் கடைகள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்ற பெண்கள் தங்களது கோரிக்கையை வென்றெடுத்துள்ளனர்.
மேலும் இவர்கள் போராட்டத்திற்கு அதிமுகவைசேர்ந்த திருத்தணி நகர செயலாளர் சௌந்தரராஜன் ஆதரவு தெரிவித்து இந்த இடத்தில் கடைகள் கட்டக்கூடாது என்று திருத்தணி நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தார்…

செய்தியாளர் -முருகன்