யப்பா…. எங்களுக்கும் பாஜகவுக்கும் போட்டியில்ல… அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்து சென்றதில் எங்களுக்கு வருத்தம் கிடையாது. 2024ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியோடு பாஜக மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் தேர்தலுக்கு முன்பே தெரியும். நான் எப்போதும் ஒருவர் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்ததும் இல்லை. ஒருவர் சென்றுவிட்டதால் வருத்தமடைந்ததும் இல்லை என்றார்.
இது குறித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுகவிற்கு யார் போட்டி என்பதில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் சாதிய பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். பிற மாநிலங்களை விட இங்கு குறைவுதான். ஆளுநர் பிற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமையை முதலில் பார்க்க வேண்டும்.
தினமும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை போல ஐ.டி. அதிகாரிகள் ஆகிவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
சனாதனம் குறித்து கண்டிப்பாக பேசுவேன். முதலில் CAG அறிக்கை குறித்து பேசுவோம், அதன் பிறகு சனாதனம் குறித்து பேசுவோம் என்று தெரிவித்தார்.