Thu. Dec 19th, 2024

5 மாநில தேர்தல் – அடுத்த வாரம் தேதிகள் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம்

5 மாநில தேர்தலுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆலோசனை செய்து வருகிறது.

மேலும், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அடுத்த வாரம் வெளியாகிறது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாகவும், மற்ற 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.