Sun. Oct 6th, 2024

பட்டியலினத் தலைவர் பதவியேற்பு குறித்த ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் !

பட்டியலினத் தலைவர் பதவியேற்பு குறித்த ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,

நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தின் பட்டிலினத் தலைவர் பதவியேற்பு குறித்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளராகப் பரப்புரை செய்வதா?

உயர்நீதிம்ன்றம் பிறப்பித்த உத்தரவைக் கூட அறிந்து கொள்ள முயற்சிக்காமல் தமிழ்நாடு அரசின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவது வேதனையளிக்கிறது.

ஒதுக்கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சார்ந்தவராக இந்நபர் இல்லை என்று நீதிமன்றம் கருதுவதால், சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்க கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ளது.

திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை, பாஜகவையும் அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்குப் பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே என்ற ஆதங்கம்தான் காரணமே தவிர, பட்டியலின மக்கள் மீதான அக்கறையில் அல்ல.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமாக ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.