சென்னையில் இன்று உலக ஆசிரியர் தினத்தில் கைது செய்யப்பட்டதற்கு ஆசிரியர்கள் கண்டன போராட்டம் செய்தனர்!
திருத்தணியில் இடைநிலை ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் செய்தனர், ஆசிரியர்களை இன்று அறவழியில் போராடியவர்களை சென்னையில் இன்று உலக ஆசிரியர் தினத்தில் கைது செய்யப்பட்டதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பழைய சென்னை சாலையில் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக இடைநிலை பதிவு முப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்று உலக ஆசிரியர் தினம் இந்த நாளில் தமிழக அரசு சென்னையில் அறவழியில் போராடிய ஆசிரியர்களை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இவர்கள் 50 ஆசிரியர்கள் போராட்டம் செய்தனர்.
இவர்கள் போராட்டத்தில் கூறுவது
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் 311 இல் கூறிய வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற எங்கள் போராட்டம் தொடரும் ,
சென்னையில் இன்று எங்கள் ஆசிரியர்களை சங்கத்தினரை கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மேலும் தமிழக அரசு கூறிய தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் போராட்டத்தில் கோஷம் எழுப்பி போராடினார்கள்,
செய்தியாளர் –
முருகன்