Thu. Dec 19th, 2024

புதுக்கோட்டையில் வள்ளலார் 201வது பிறந்த தின விழா!.

புதுக்கோட்டையில் வள்ளலார் 201வது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன்குளம் மேற்கு புறம் உள்ள வள்ளலார் சத்திய ஞானசபை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் தலைவர் குழந்தைகள் மருத்துவர் ச.ராமதாஸ் கொடியேற்றி வைத்து வள்ளலார் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள், அருள் பிரசாதங்கள்,வள்ளலார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் வழங்கி பேருரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் முனியமுத்து மற்றும் நமச்சிவாயம் ஆஞ்சநேயர் கோவில் ஆனந்தன் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை