சென்னை பெருநகர கமிஷனரின் வித்தியாசமான அனுகுமுறையால் மன உளைச்சலில் இருந்து விடுபட்ட நான்கு இளைஞர்கள்…
சில நாட்களுக்கு முன்பு நான்கு இளைஞர்கள் தங்கள் பைக் சாவியை தொலைத்துவிட்டதால் அந்த சாலையில் இருந்த சி.சி.டி.வி கேமாராவை தங்களது பைக் நிறுத்தியிருந்த பக்கமாக சி.சி.டி.வி கேமராவை திருப்பி வைத்துள்ளனர். இதை கேமரா பதிவில் பார்த்த காவல்துறையினர் அந்த இளைஞர்கள் பைக் திருடுவதற்கு முயற்ச்சித்தார்கள் என்று பத்திரிகையில் புகைப்படமும் வந்த நிலையில் அவர்கள் தனது சொந்த பைக் திருடு போய்விட கூடாது என்றுதான் கேமராவை திருப்பி வைத்தது தெரியவந்தது. தவறுதலாக பைக் திருடர்கள் என்று பத்திரிகையில் தங்களது புகைப்படம் வந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆனார்கள். இந்நிலையில் அந்த இளைஞர்களை கடந்த 31 – ந் தேதி மாலை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து காவல்துறை கமிஷனர் விஸ்வநாதாதன் அவர்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள்