சார்பதிவாளர் அலுவலக ஆவணங்களை | குப்பைகளை போன்று டிராக்டரில் எடுத்துச் சென்ற அவலம் |
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி சாலையில் மதுவிலக்கு காவல்துறை எதிரில் சார்பதிவாளர் கடந்த அலுவலகம் 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது, மேலும் இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது இதனால் பணிகளுக்காக தற்காலிகமாக சார்பதிவாளர் அலுவலகமாக பழைய சென்னை சாலையில் ரூ/-30,000, வாடகைக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்துள்ளனர்.
இப்படி சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது என்று பழைய சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை, மேலும் பழைய சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை குப்பைகளை போல டிராக்டரில் எடுத்துச் சென்ற அவலம்.
தற்போது மழைக்காலம் என்பதால் ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்துச் சொல்ல ஒரு தார்ப்பாய் கொண்டு மூடாமல் எடுத்துச் செல்லும் பொழுது ஆவணங்கள் சாலையில் சிதறியது ஆவணங்களை குப்பைகள் போல் அள்ளிச்சென்ற ஊழியர்கள், இப்படி ஆவணங்களை எடுத்துச் செல்வதில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள்.
மேலும், புதிய சார்பதிவாளர் அலுவலகம் பழைய சென்னை சாலையில் இடம் நெருக்கடி பகுதியில் பொதுமக்களுக்கு அமர்வதற்கு கூட இடம் இல்லாத இடத்தில், செயல்பட தொடங்கியுள்ளது மேலும், குடிதண்ணீர் வசதி இல்லாத இடத்தில் வெயில் மற்றும் மழைக்காலங்களில் அவதி அடையும் அளவிற்கு புதிய சார்பதிவாளர் அலுவலகம் தற்காலிக வாடகை கட்டிடம் ஏற்படுத்திய அதிகாரிகள் மக்களின் நலனை மறந்து அதிகாரிகள் செயல்படுவதாக அப்பகுதிமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
செய்தியாளர் –
முருகன்