Thu. Dec 19th, 2024

வீட்டில் எந்த பகுதியில் விளக்கேற்றினால் தோஷம் நீங்கி கடவுள் ஆசி கிடைக்கும்ன்னு தெரியுமா?

கடவுளுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் ஒன்று. ஒளி நிறைந்திருந்தால் அங்கு அதிக நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். எனவே, தினமும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

மேலும், விளக்கேற்றி வழிபட்டால் தீய சக்தி வீட்டிலிருந்து விலகி அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சரி வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்ற வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம் –

வீட்டு வாசலில் கோலமிட்டு அதன் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் தெய்வ சக்தி வீட்டிற்குள் வரும்.
வீட்டிற்கு முன்பு நுழைவு வாசலில் 2 புறங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.
வீட்டில் விளக்கு மாடம் இல்லாதவர்கள் வீட்டின் நிலைப்படியில் 2 பக்கம் விளக்கு ஏற்றலாம்.
அடுக்குமாடி குடியிருப்பு, குடிசை வீடு என எந்த வீடாக இருந்தாலும் வீட்டின் நிலைப்படியில் விளக்கேற்றுவது நல்லது.
வீட்டின் முற்றத்தில் விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
வீட்டின் சமையலறையில் விளக்கேற்றினால் நன்மை கிடைக்கும். சமையலறையில் விளக்கேற்றினால் அன்ன தோஷம் நீங்கும்.
கண்டிப்பாக பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். அப்படி செய்தால் அனைத்து பலன்களும் கிடைக்கும்.
கொல்லைப்புறத்தில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும்.
மாட்டு தொழுவத்தில் விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி வாசம் செய்வாள்.
துளசி மாடத்தில் விளக்கேற்றி வழிபட்டால் விஷ்ணு பகவானின் அருள் கிடைக்கும்.