Thu. Dec 19th, 2024

உலககோப்பை கிரிக்கெட் தொடர் – ஆர்வம் காட்டாத ரசிகர்கள் : வெறிச்சோடி காணப்பட்ட நரேந்திர மோடி மைதானம்!

இன்று 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. இத்தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 83.10 கோடியாகும். இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன், பரிசாக ரூ.33.24 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 16.61 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையும் இரு அணிக்கு தலா ரூ.6.65 கோடி வழங்கப்படும்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது.

ஆனால், 1 லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள இருக்கைகள் அனைத்தும் காலியாக உள்ளது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டம் இதுவாகும். ஆனால் ரசிகர்கள் யாரும் இப்போட்டியை காண ஆர்வம் காட்டாததால் நரேந்திர மோடி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.