திமுக, பாஜக இடையேதான் போட்டி.. அதிமுகவைப் பற்றி கவலையில்லை – அண்ணாமலை பேட்டி!
“திமுக, பாஜக இடையேதான் போட்டியே” தான் போட்டி இருக்கும். நாங்கள் யாருடன் சண்டை போட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்து சென்றதில் எங்களுக்கு வருத்தம் கிடையாது. 2024ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியோடு பாஜக மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் தேர்தலுக்கு முன்பே தெரியும். நான் எப்போதும் ஒருவர் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்ததும் இல்லை. ஒருவர் சென்றுவிட்டதால் வருத்தமடைந்ததும் இல்லை என்றார்.
அப்போது, செய்தியாளர்: அண்ணாவைப் பற்றி சொல்லிய கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?
அதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, அதைப்பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.