Thu. Dec 19th, 2024

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – 2 பேருக்கு தூக்குத்தண்டனை; நீதிமன்றம் அதிரடி!

திரிபுராவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலம், தர்மாநகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி 2019ம் ஆண்டு கடத்திச் சென்ற மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். சிறுமியை காணாததால் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடினர். அப்போது, சில நாட்களுக்கு பின் சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டாள்.

மருத்துவமனையில் சிறுமியின் பிரேதத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக ரிப்போர்ட்டில் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு அகர்தலாவில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 4 ஆண்டுகள் நடைபெற்ற இந்த விசாரணையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.

இருவரை குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.