அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி – நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்
அரசியலில் அண்ணாமலைக்கு அனுபவமே இல்லாத கத்துக்குட்டி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்தார்.
தன்னைத்தானே விளம்பரத்தும், ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதிதான் அண்ணாமலை. அதிமுகவின் துணையில்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது.
பாஜகவின் கொள்கைள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை என்று அவர் பேசினார்.