அண்ணாமலை வர தாமதம் – அவர் இல்லாமல் தொடங்கிய பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில், பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அண்ணாமலை வர தாமதமானதால் அவர் இல்லாமல் கூட்டம் தொடங்கியது.
இன்று சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வர தாமதமானதால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து, அண்ணாமலை வருவதற்கு முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது.
அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.