நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
![](https://www.peranmai.com/wp-content/uploads/2023/10/ee03d350-6283-11ee-99c8-552ffcd0047c.jpg)
நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவன நிறுவனர்கள் நேற்று உபா சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட கடந்த 3 ஆண்டுகளில் ரூ.38.05 கோடி பணம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கில் நேற்று நியூஸ் கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.