கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரக் கணவன்!
திருப்பூர் அருகே மதுபோதையில் கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அணில் பவார் என்பவர் தன் மனைவி ரேகா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் திருமுருகன் பூண்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். ரேகா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த அணில் பவார், ரேகாவிடம் சண்டை இழுக்க, இவருக்குள்ளும் பயங்கரமான சண்டை வெடித்தது. இதனால், ஆத்திரமடைந்த அணில் பவார் பூரிக்கட்டையால் ரேகாவை கொடூரமாக தலையில் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து அக்கம்,பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்ப முயன்ற அணில் பவாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.