உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – சென்னை வந்தடைந்த இந்திய அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது.
வரும் 5ம் தேதி 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.