Fri. Dec 20th, 2024

மயிலாடுதுறையில் பட்டாசு ஆலையில் பங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி அருகே தில்லையாடி என்ற பட்டாசு ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.

போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், குடோனில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது வெடி குண்டு வெடித்து 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.