Thu. Dec 19th, 2024

ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது!

கர்நாடகாவில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், ராமநகராவைச் சேர்ந்தவர் மஞ்சு (21). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், மஞ்சுவிடன் நண்பர் ரவி சென்று, நான் உன் காதலியை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வை என்று கேட்டுள்ளார். தன் நண்பனுக்காக மஞ்சு தன் காதலியை விட்டுக்கொடுக்க முன் வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி கோயிலுக்கு வருமாறு காதலியை மஞ்சு அழைத்திருக்கிறார். காதலியும் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது, மஞ்சு காதலியிடம் என் நண்பன் ரவியை நீ திருமணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார். அதற்கு காதலி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு நீ ரவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தன் நண்பன் ரவியை திருமணம் செய்யாவிட்டால், என்னிடம் இருக்கும் உன் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதன் பிறகு காதலி வேறு வழியில்லாமல் ரவியை திருமணம் செய்து கொண்டார். ரவி வலுக்கட்டாயமாக தாலி கட்டி சாமராஜநகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

காதலி ரவி வீட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, ரவிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி தன் பெற்றோரிடம் விவரத்தை கூறினாள். இது குறித்து காதலியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மஞ்சு, ரவியை கைது செய்தனர். காதலியை மீட்டு பெற்றோருடன் நேற்று போலீசார் அனுப்பி வைத்தனர்.