Sun. Oct 6th, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். அதனால் தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்பு இருக்கிறது. அந்த வரம்பு தமிழக அரசுக்கு உட்பட்டது.

எனவே, சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.