Fri. Dec 20th, 2024

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை!

குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டித்து, புகையிலை சேர்ந்த உணவுப் பொருட்கள் மீதான தடையை 2013 மே 23ல் தமிழக அரசு அமல்படுத்தியது.

உணவின் தரம் குறித்த புகார்களை TN Food Safety Consumer App வயிலாகவும், 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்பு 191.1 டன் குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது.

உணவகங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகளை கண்டறிந்து ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.