Fri. Dec 20th, 2024

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் அந்தக் கடிதத்தில்,

கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.

மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும்.

பல தசாப்தங்களாக தங்கள் வலுவான பொது சுகாதார உள்கட்டமைப்பை அயராது கட்டியெழுப்பிய மாநிலங்களுக்கு ஏன் அபராதம் விதிக்க வேண்டும்?

பின்தங்கிய மாவட்டங்கள் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மூன்றாம் நிலை மருத்துவ வசதியைப் பெறாமல் இருப்பது நியாயமா?

என்எம்சியின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பொது மற்றும் தனியார் சுகாதார சேவைகளின் எதிர்கால வளர்ச்சியை கடுமையாக கட்டுப்படுத்தலாம்.

ஒவ்வொரு மாவட்டமும் ஏழைகளுக்கு சிறந்த சுகாதார சேவைக்கு தகுதியானது! ஒவ்வொரு மாநிலமும் அதன் முழு திறனுடன் முன்னேற அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.