Sun. Oct 6th, 2024

பாஜகவுடன் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹2.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

அப்போது, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், பாஜவுடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி நீடிக்கும் என வி.பி.துரைசாமி கூறியது குறித்து அவரிடமே கேட்க வேண்டும்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து அமையவுள்ள கூட்டணி குறித்து பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி முறிவால் வாக்குகள் சிதறாது. தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை நாங்கள் பின்னர் அறிவிப்போம் என்றார்.