குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காங்.எம்.பி மஹீவா மொய்த்ரா கைது!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மேற்கு வங்கத்திற்கான தொகையை விடுவிக்கக் கோரி, ஒன்றிய இணையமைச்சர் நிரஞ்சன் ஜோதியை, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சந்திக்கச் சென்றார்.
ஆனால், நேரம் ஒதுக்கியும், மணிக்கணக்கில் காக்க வைத்துவிட்டு சந்திக்க மறுத்ததாக மஹுவா புகார் கொடுத்தார்.
இதற்கிடையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டெல்லி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். போலீசார் கைது செய்யும்போது அவர் கத்தி கூச்சல் போட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.