புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு!
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மக்கள் உயிர் சார்ந்த விஷயம் மக்கள் நலன் சார்ந்த விஷயத்திற்கு என்றைக்குமே நான் குரல் கொடுப்பேன் என உறுதியளித்தார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும்,விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் டெங்குவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்ததோடு மருத்துவர்கள் இடம் என்னென்ன வழிகாட்டுதல் கடைபிடிக்கப்படுகிறது என்றும் கேட்டறிந்தார்
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜயபாஸ்கர்
தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அரசு அறிக்கையினுடைய 29 ஆம் தேதியிலிருந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட இவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருவதை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டும் சிகிச்சைக்கு வராமல் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தைகளிடம் அரசு மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்
அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
முறையாக சிகிச்சை எடுக்கவில்லை என்றால் ரத்த அளவு பிளேட் ரேட் குறைந்து இறப்பு ஏற்படும் நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளது.
அதிமுக அழுத்தம் கொடுத்ததற்கு பிறகு தான் சிறப்பு மருத்துவ முகாம்களை அரசு அமைத்துள்ளது இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து துறை அதிகாரிகளோடு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தற்போது தமிழக அரசு இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக உள்ளது.
மேலும் டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு மஸ்தூர் களப்பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் முறையாக நியமிக்கப்படாமல் உள்ளதால் டெங்கு ஒழிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவர்கள் சிறப்பு மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் ஆகியவர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்.
டெங்கு கொசுவை அழித்தால் தான் டெங்குவை கட்டுப்படுத்த முடியும் அதற்கு களப்பணியாளர்கள் தான் மிக முக்கியம் களப்பணியாளர்கள் இல்லாமல் மந்தமாக பணிகள் உள்ளதால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினராக நான் தவறுகளை சுட்டி காட்டினால் எனது ஊரில் கூட்டம் நடத்தி திமுகவினர் என்னை தரம் வாழ்த்தி தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்கின்றனர் என்னை விமர்சனம் செய்தால் நான் தவறாக நினைக்கவில்லை அவர்களை வாழ்த்துகிறேன்.
என்னை விமர்சனம் செய்வதால் அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம் நான் தவறை சுட்டிக்காட்டுவது நிறுத்திக் கொள்ள மாட்டேன். இது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் என் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது.
நான் தொடர்ந்து தவறுகளை சுட்டிக்காட்டி தவறுகள் இருந்தால் மக்கள் மன்றத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவேன். அஇஅதிமுக ஆட்சியில் விவசாயிகளை நீண்ட நாள் கனவான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் பெற்று எழுநூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டாலும் தற்போது இந்த பணிகள் மிகவும் மந்தமாக தான் நடைபெற்று வருகிறது.
மந்தப் பணிகள் குறித்து தான் நான் கேள்வி கேட்கிறேன் பதில் இல்லை தனிமை மனித விமர்சனங்கள் வைக்கின்றனர்.
டெங்கு பரிசோதனை அதிகப்படுத்த வேண்டும் மேலும் நான்கு நாட்கள் கழித்து ஐஜிஎம் என்ற பரிசோதனையும் எடுக்க வேண்டும் அதில் பாசிட்டிவ் வருபவர்களை தனியாக ஒதுக்கி அவர்களுக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் .
மக்கள் உயிர் சார்ந்த விஷயம் மக்கள் நலன் சார்ந்த விஷயத்திற்கு என்றைக்குமே நான் குரல் கொடுப்பேன். மக்களைத் தேடி மருத்துவம் என்பது ஏற்கனவே அதிமுக கட்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தான் அதை பெயரை மட்டும் தான் தற்போது மாற்றி உள்ளனர் எதுவாக இருந்தாலும் முறையாக சரியாக மக்களை தேடி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
கூட்டணி என்பது வேறு மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை விமர்சனம் செய்வது என்பது வேறு தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்களுடைய தொகுதி பிரச்சனைகளை ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் இது செய்ய அவர்கள் தற்போது மறுக்கின்றனர். தற்போது தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது குறைகளை சுட்டிக்காட்டினார் அல்லவா அதே போன்று தான் தற்போது நாங்கள் குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். ஆளும் அரசில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு விமர்சனங்களை தாங்கிக்கொள்ளக்கூடிய மன பக்குவத்தோடு இருக்க வேண்டும்.
தற்போது கல்வித்துறை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. சுகாதாரத்துறை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
தற்கொலை மனநிலையை மாற்றுவதற்காக தான் கடந்த அதிமுக காட்சி காலத்தில் திட்டம் உருவாக்கப்பட்டது அதனை இந்த அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
பேட்டியின் போது நகரச் செயலாளர்கள் க.பாஸ்கர், எஸ்.ஏ.எஸ்.சேட்(எ)அப்துல் ரஹ்மான் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அமானுல்லா புதுக்கோட்டை