Thu. Dec 19th, 2024

செங்கல்பட்டு காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் வேளாண்மை மாணவியர்கள் பங்கேற்பு!

திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு மாவட்டம் காந்தி ஜெயந்தி அன்று வருடா வருடம் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பாரத் கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கும் வேளாண்மை மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் திரு.நரேந்திரன், தலைவி திருமதி. தனலட்சுமி கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் திருமதி. பூங்கொடி பாலு, மக்கள் நல பணியாளர் திரு. கமலக் கண்ணன் ஊராட்சி செயலாளர் திரு.மணவாளன் உதவி வேளாளர் அலுவலர் திரு.ராம்கி ஆகியோர் புலியூர் கிராம சபையில் கலந்து கொண்டனர்.

கொசு ஒழிப்பு, சாக்கடை அடைப்பை நீக்குவது, மழைநீர் சேகரிப்பு, குளம்,குட்டை,ஏரிகளை சுத்தம் செய்வது,புதிய தண்ணீர் தொட்டி அமைப்பது,சாலை மற்றும் தண்ணீர் வசதிகள் செய்து தர மக்களை கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

இறுதியாக உதவி வேளாண் அலுவலர் திரு.ராம்கி அவர்கள் கிராமத்தில் இருக்கும் பயனாளிகளுக்கு ஒருவருக்கு இரண்டு கன்னு இலவசமாக தருவதாக கூறினார்.

பல மரக்கன்று மகோனி கண்ணு, தேக்கு மரம் சம்பா நெல் உளுந்து விதைகள் விவசாய இயந்திரங்கள் டிராக்டர்கள் மானிய விலையில் வேளாண்மை விரிவாக்கம் மையத்திலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் ஊரில் உள்ள நிறை குறைகள் மற்றும் சரி செய்யப்பட வேண்டிய பணிகள், தூய்மை பணிகள், இதைப் பற்றி விவாதிக்கப்பட்டன. அதன் பின் மக்கள் தங்களுடைய மனுக்களை தலைவரிடம் வழங்கினர்.