Sun. Oct 6th, 2024

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தொழில்முனைவோர் வாக்குவாதம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் தொழில்முனைவோர் குற்றச்சாட்டு வைத்து வாக்குவாதம் செய்ததால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் சதீஷ் மத்திய நிதியமைச்சர் முன்பு வாக்குவாதம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தபோதும் தனக்குக் கடன் மறுக்கப்படுவதாகவும், ₹40 லட்சம் கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கத் தயார் என்று கூறிய பிறகும் கடன் கிடைக்கவில்லை என்று அவர் குற்றச்சாட்டி பேசினார்.

இதனையடுத்து, பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சதீஷின் முறையீடு பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.