Sun. Oct 6th, 2024

வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? அப்போ…. கண்ணாடியை இந்த திசையில் வைத்தால் போதும்..!

நம் வீட்டில் இருக்கும் கண்ணாடிக்கும், நம் மகிழ்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. உங்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் செழிக்க வேண்டுமா? அப்போ.. கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று பார்ப்போம் –

கண்ணாடி முகம் பார்க்க மட்டுமல்ல, நம் வீட்டின் அழகையும் கூட்டுகிறது. சாஸ்திரத்தில் கண்ணாடிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

எனவே, கண்ணாடியை எந்த திசையில் வைத்தால் நமக்கு நல்லது வந்து சேரும் என்பதைக் குறித்து பார்ப்போம் –

படுக்கையறையில் கண்ணாடியை தவறாக வைத்தால் நமக்கு எதிர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வரும்.

கண்ணாடியை சரியாக வைத்தால், அது உங்கள் குடும்பத்திற்கும் நல்ல பலனை கொடுக்கும்.

படுக்கையறையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் படுக்கை அறையில் டிரஸ்ஸிங் டேபிள் இருந்தால், அதை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.

படுக்கையில் உள்ள கண்ணாடியில் உங்கள் உருவம் அதில் பிரதிபலிக்க கூடாது.

கண்ணாடி வைப்பதற்கு சரியான உயரம் தரையிலிருந்து சுமார் 4-5 அடி உயரம் இருக்க வேண்டும்.

மேஜை அல்லது தரையில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

படிக்கும் மேஜைக்கு அருகில் கண்ணாடி வைக்கவே கூடாது. அது மோசமான அதிர்வுகளை கொடுக்கும்.

வீட்டில் செவ்வக அல்லது சதுர கண்ணாடியை தேர்வு செய்து வைக்க வேண்டும்.

வட்டம் அல்லது ஓவல் வடிவ கண்ணாடிகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை உங்கள் வீட்டிற்கு நேர்மறையை கொண்டு வராது.

கண்ணாடியின் அளவு பற்றி வாஸ்து சாஸ்த்திரத்தில் குறிப்பு ஏதும் இல்லை. ஆதலால், செவ்வக அல்லது சதுரக் கண்ணாடியை தேர்வு செய்வது நல்லது.