வரப்போகும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – இந்த வீரர்களுக்கெல்லாம் கடைசிப் போட்டியாம் – ஷாக்கில் ரசிகர்கள்!
வரும் 5ம் தேதி 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் சில முன்னணி வீரர்களுக்கு இப்போட்டி கடைசி போட்டியாக இருக்கும் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவர்கள் யார், யார் என்று பார்ப்போம் –
ரோகித் சர்மா (இந்தியா),
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா),
குயின்டான் டி காக் (தென்னாப்பிரிக்கா),
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து),
ஷகிப் அல்ஹசன் (வங்காளதேசம்),
அஸ்வின் (இந்தியா),
டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி (நியூசிலாந்து)