Mon. Jul 8th, 2024

ஆசிய விளையாட்டு போட்டி – வில்வித்தையில் இந்திய வீரர் பிரவீன் அபார வெற்றி!

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் காலிறுதி சுற்று போட்டியில் இந்தியா-கஜகஸ்தான் மோதின.

இப்போட்டியில் இந்தியா சார்பாக பிரவீனும், கஜகஸ்தான் சார்பாக ஆண்டரியும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் 147-147 என்ற புள்ளி கணக்கில் சரிசமநிலையில் இருந்தனர்.

இதனையடுத்து, சூட் ஆப் முறையில் 10 புள்ளிகள் பெற்று கஜகஸ்தான் வீரரை 150-142 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் பிரவீன் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.