பழனி முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை!

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போனை கொண்டு செல்ல நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வீடியோ, புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதுடன், செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பழனி மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயில், ரோப் கார், ரயில் நிலையப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போனை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறையில் செல்போனை வைக்க ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.