Thu. Dec 19th, 2024

மதுரையில் இளைஞரை தாக்கிவிட்டு நகைபறித்த திமுக, பாஜக நிர்வாகிகள் கைது!

மதுரை அருகே திமுக நிர்வாகி மகனிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலுசார் கைது செய்தனர்.

மதுரை, பரசுராம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் புதூர் பகுதி திமுக துணைச்செயலாளராக உள்ளார். இவரது மகன் ஹரிகரசுதன் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு பெட்ரோல் பங்கில் டூவீலருக்கு பெட்ரோல் போட்டு விட்டு இவர் திரும்பும்போது, அவரை பின் தொடர்ந்து வந்த சிலர், ஹரிகரசுதனை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக ஹரிகரசு போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா மூலம் 5 குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை திமுக 53-வது வட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான கும்பல் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கார்த்திகேயன், அவரது கூட்டாளிகள் பாஜக புதூர் மண்டல செயலாளர் ஜெகன், கல்லூரி மாணவர் சுதர்சன், முகம்மது ஆசிக், பிரகாஷ் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கச் செயினை மீட்டு ஹரிகரசுவிடம் ஒப்படைத்தனர்.