Thu. Dec 19th, 2024

மகனுடன் நெருக்கம்…. மனைவியின் தலையை துண்டித்த கணவன் – அதிர வைக்கும் கொலைச் சம்பவம்!

உத்திரப்பிரதேசத்தில் கோடாரியால் மனைவியின் தலையை துண்டித்த கொடூர கணவனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், சத்தர்பூர் மாவட்டம், சம்ரஹா கிராமத்தில் 30 மதிக்கத்தக்க பெண்ணின் தலையில்லாத உடல், அரை நிர்வாண நிலையில் இருந்ததைக் கண்டு அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தலையில்லாத, அரை நிர்வாணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். மேலும், தலையை போலீசார் தேடிய போது, அந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் தலையை கண்டுபிடித்து மீட்டனர். அப்பெண்ணின் ஒரு கையின் 4 விரல்களும் துண்டிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பஹ்ரா கிராமத்தில் வசிக்கும் ராம்குமார் அஹிர்வார் என்பவரின் மனைவி மாயா தேவி என்று அடையாளம் காணப்பட்டது.

உடனடியாக கணவர் ராம்குமார், மகன்கள் சூரஜ் பிரகாஷ், பிரிஜேஷ் மற்றும் மருமகன் உதய்பன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மாயா தேவி கொலையில் இவர்கள் அனைவருக்கும் சம்பந்தம் இருப்பதாக ஒப்புக்கொண்டனர்..

போலீசாரிடம் பெண்ணின் கணவர் ராம்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், என் 2வது மனைவியான மாயா தேவி, என் மகன்களின் ஒருவருடன் தகாத உறவை வைத்திருந்தார். மேலும், என் 2வது மகனுடன் இதேபோன்று நெருக்கத்தை காட்டினார். இதனால், நாங்கள் 4 பேரும் சேர்ந்து மாயா தேவியை சம்ரஹா கிராமத்திற்கு அழைத்துச் சென்றபோது, எங்களுக்கும், மாயா தேவிக்கும் வாக்குவாதம் வெடித்தது. உடனே மாயாவதி ஓடும் ஜீப்பிலிருந்து குதித்து தப்ப முயற்சி செய்தார். அப்போது, கோடாரியால் கழுத்தை வெட்டி தலையை துண்டித்தோம். சாலையில் செல்லும் வழியில் சடலத்தை ஓரிடத்திலும், இன்னொரு இடத்திலும் வீசி விட்டோம் என்று வாக்குமூலம் கொடுத்தார்.

கோடாரியால் பெண்ணை கோடாரியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.