தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம்!
உத்திரப்பிரதேசத்தில் தன் மகளுக்காக வங்கி லாக்கரில் சேமித்த ரூ18 லட்ச பணத்தை கரையான் அரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில், மொரதாபாத்தைச் சேர்ந்தவர் அல்கா பதாக். இவர் தன் மகள் திருமணத்திற்காக ரூ.18 லட்சத்தை வங்கி லாக்கரில் சேமித்து வைத்திருந்தார்.
சிறுதொழில் மற்றும் டியூஷன் எடுத்து அதில் கிடைத்த பணத்தை தன் மகள் திருமணத்திற்காக சிறுகச், சிறுக வங்கியில் சேமித்து வந்துள்ளார்.
ஆனால், ரூ.18 லட்சத்தையும் கரையான் அரித்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் வங்கி அதிகாரிகளிடன் புகார் கொடுத்தார். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.