அதிமுக ஒன்று சேர வேண்டும்.. அப்போதான் வெற்றி கிடைக்கும்… – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!
அதிமுக ஒன்று சேர வேண்டும். அப்போதான் வெற்றி கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.
தமிழகத்தில் சமீப காலமாக பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதற்கிடையில், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக மவுனம் காத்து வருகிறது. மேலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அதிமுக அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நீதிமன்றத் தீர்ப்பை மீறி நடந்தது. அதில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக நாங்கள் மேல்முறையீடு செய்தோம். அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி கூறிய கருத்துக்களை நினைத்து எடப்பாடி கவலைப்பட்ட மாதிரி எங்களுக்கு தெரியவில்லை. அதிமுக ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்கும். அதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்றார்.