உ.பி.யில் மருத்துவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி உயிரிழப்பு!

உத்திரப்பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி ஒருவர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம், மெயின்புரியில் மருத்துவர் ஒருவர் 20,000 ரூபாய் வாங்கிக்கொண்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது, தவறான ஊசி போட்டதால் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். இதன் பிறகு சிறுமி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.