Fri. Dec 20th, 2024

Sorry சித்தார்த் – கன்னடியர்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்.. – நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் சித்தார்த் பட நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றிய கன்னட அமைப்புகளின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று நடிகர் பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று பெங்களூருவில் ‘சித்தா’ பட நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, உள்ளே நுழைந்த ஒரு கர்நாடக அமைப்பினர், காவிரி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு தேவையா எனக் கூறி நடிகர் சித்தார்த்திடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, நிகழ்விலிருந்து சித்தார்த் பாதியில் வெளியேறினார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் கர்நாடக அமைப்பினர் மீது கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக அமைப்பினருக்காக நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத அரசியல் கட்சிகளையும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேள்வி கேட்காமல், சாமானிய மக்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஒரு கன்னடிகனாக, கன்னடியர்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன். Sorry சித்தார்த் என்று பதிவிட்டுள்ளார்.