நடிகர் சித்தார்த்தை பட நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றிய கன்னட அமைப்பினர் – வெடித்த சர்ச்சை!
கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் நடிகர் சித்தார்த்தை பட நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதால் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ‘சித்தா’. இப்படத்தில் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். நேற்று இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் ‘சித்தா’ பட நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, உள்ளே நுழைந்த ஒரு கர்நாடக அமைப்பினர், காவிரி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு தேவையா எனக் கூறி நடிகர் சித்தார்த்திடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, நிகழ்விலிருந்து சித்தார்த் பாதியில் வெளியேறினார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் கர்நாடக அமைப்பினர் மீது கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.