Sun. Oct 6th, 2024

திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்திட வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா திருவலாங்காடு ஊராட்சியில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் 120 பேர் ஒன்று திரண்டு இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் கூறுகையில்,

1) திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்திட வேண்டும், 2) கரும்பு டன் 1 க்கு ரூபாய் 5000 ஆயிரம் வழங்க வேண்டும்,

3) கரும்பு வெட்டுக் கூலியை தொகையை முறைப்படுத்திட வேண்டும்,

4) திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றிடும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் ஆக்கிடுக,

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டம் செய்தவாறு நடை பயணமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்யப் போவதாக அறிவித்து இவர்கள் இங்கிருந்து புறப்பட்டனர்

அப்போது சிறிது தூரம் நடந்தவுடன் திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையிலான போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

செய்தியாளர்
முருகன்